கால்வாய்க்குள் பஸ் ஓட்டிய திமுக எம்.எல்.ஏ.. இலவசப்பேருந்து தொடக்க நிகழ்ச்சியின் அதிர்ச்சி வீடியோ! - govt free bus accident
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/640-480-18165177-thumbnail-16x9-bus111.jpg)
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம், கீழ்கதிப்பூர் பகுதியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் மகளிர் இலவச பேருந்து சேவையினை துவக்கி வைக்கும் நிகழ்ச்சி திங்கட்கிழமை(ஏப்ரல் 3) மாலை நடைபெற்றது. இதில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம், சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன், திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துக்கொண்டனர்.
நிகழ்ச்சியில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம், கட்சி நிர்வாகிகளை பேருந்தில் ஏற்றிக்கொண்டு திமுக எம்.எல்.ஏ சிவிஎம்பி எழிலரசன் பேருந்தை ஓட்டிச்சென்றார். பேருந்தை முறையாக இயக்கத் தெரியாமல் சாலையின் ஓரத்தில் இருந்த கால்வாய்க்குள் பேருந்தை நுழைத்துவிட்டார்.
இதனால் பேருந்து பயணம் செய்த எம்.பி உள்ளிட்டோர் அலறியடித்தபடி பேருந்தை விட்டு கீழே இறங்கினர். கால்வாய் சிறியதாக இருந்ததாலும், அருகில் மின் கம்பத்தின் ஸ்டே கம்பி இருந்ததாலும் பேருந்து கவிழாமல் நல்வாய்ப்பாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. புதிய வழித்தடத்தில் பேருந்து தொடக்க நாளிலேயே விபத்தை ஏற்படுத்திய திமுக எம்.எல்.ஏ-வின் செயலை அப்பகுதி மக்கள் வேடிக்கையாக பார்த்துச் சென்றனர்.