தமிழ் வழியில் பயின்ற என்னால் இந்த இடத்துக்கு வர முடிகிறது என்றால் உங்களாலும் முடியும்: நீதிபதி வைத்தியநாதன்
🎬 Watch Now: Feature Video
திருச்செந்தூர் (தூத்துக்குடி): திருச்செந்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் இணையதள சட்ட ஆலோசனை தொடர்பு மைய தொடக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன் கலந்துகொண்டார். இதனை தொடர்ந்து அங்கு இணையதள சட்ட ஆலோசனை மையம் தொடக்க விழா நடைபெற்றது.
தமிழகத்தில் முதன் முதலாக ஆரம்பிக்கப்பட்டுள்ள சட்ட ஆலோசனை மையத்தை தொடங்கிவைத்த அவர், பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த நபர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தொடர்ந்து அந்நிகழ்ச்சியில் பங்கேற்ற வழக்கறிஞர்கள் பலருக்கு மரக்கன்றுகளையும் நீதிபதி வைத்தியநாதன் வழங்கினார். அதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அவர், தமிழர்கள் தன்னைத் தானே தாழ்த்திக் கொள்ளக் கூடாது எனவும், எல்லோரும் எல்லா இடத்திற்கும் வரவேண்டும் எனவும் அறிவுறுத்தினார். மேலும், மாவட்ட நீதிமன்றங்களில் நீதிபதி பணியிடங்கள் காலியாக இருக்கிறது எனக் குறிப்பிட்ட அவர், அதற்கான தேர்வுகள் விரைவில் நடைபெறவுள்ளது எனவும் தெரிவித்தார்.
மேலும், அந்த தேர்வினை இளம் வழக்கறிஞர்கள் அனைவரும் எழுதி தேர்ச்சிப்பெற்று நீதிபதியாக வர வேண்டும் என்ற கேட்டுக்கொண்ட அவர், தமிழகத்தில் இருந்து நிறைய நீதிபதிகள் நீதிமன்றங்களுக்கு வர வேண்டும் என அறிவுறுத்தினார். தொடர்ந்து பேசிய அவர், 'மிக சாதாரண குடும்பத்தில் பிறந்து தமிழ் வழியில் பயின்ற என்னால் இந்த இடத்துக்கு வர முடிகிறது என்றால் உங்களாலும் முடியும்' என உணர்ச்சிப் படப் பேசி நம்பிக்கை அளித்தார். கடந்த காலங்கள் போல் அல்லாமல் தற்போது எல்லா வசதிகளும் உள்ளது எனவும்; ஆதலால் இளம் வழக்கறிஞர்கள் நீதிபதியாக வர வேண்டும் என்பது என் ஆசை எனவும் அவர் அப்போது கூறினார்.
இதையும் படிங்க: Vijayakumar IPS: யார் இந்த விஜயகுமார் ஐபிஎஸ்? திறம்பட கையாண்ட வழக்குகள்!