நாசாவுடன் சேர்ந்து இஸ்ரோ போடும் சூப்பர் திட்டம் : முன்னாள் தலைவர் சிவன் கொடுத்த தகவல்! - science
🎬 Watch Now: Feature Video
கன்னியாகுமரி: இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் (ISRO) முன்னாள் தலைவரான சிவன், கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு சில நிகழ்ச்சிகளில் பங்கேற்க நாகர்கோவில் அரசு விருந்தினர் மாளிகைக்கு வருகை புரிந்திருந்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் கூறுகையில், "மனிதர்களை விண்ணிற்கு அனுப்பும் ககன்யான் திட்ட பணி புதிய தொழில்நுட்பங்கள் புகுத்தப்பட்டு விரைவாக நடந்து வருகிறது. மேலும், மனிதர்கள் செல்வதால் ராக்கெட் மிகவும் கவனமாக வடிவமைக்கப்பட்டு வருகிறது. ராக்கெட் செல்லும் பாதையில் ஏதேனும் கோளாறு ஏற்பட்டால், அதற்கு உடனடியாக மாற்று நடவடிக்கை இருக்க வேண்டும் என்பது குறித்தும் சோதனை செய்யப்பட்டு வருகிறது.
மேலும் நில அதிர்வுகளை துல்லியமாக முன் கூட்டியே கணிக்கும் வகையில் நாசா மற்றும் இஸ்ரோ இணைந்து NISAR (NASA-ISRO Synthetic Aperture Radar) என்ற புதிய சேட்டிலைட்டை ஓராண்டிற்குள் ஏவத் திட்டமிடப்பட்டு உள்ளது. இது மக்களுக்கு மிகவும் பயனுள்ள சேட்டிலைட்டாக இருக்கும். மேலும் இத்திட்டம் நடைமுறைக்கு வந்தால், பல உயிர்கள் முன் கூட்டியே பாதுகாக்கப்படும் என்பதற்காக இஸ்ரோவின் ஒரு புதிய முயற்சியாகும்" என்றார்.