கொடைக்கானல் வனப்பகுதிகளில் சோலை மந்திகள் எண்ணிக்கை அதிகரிப்பு - சோலை மந்தி

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Mar 8, 2023, 5:29 PM IST

Updated : Mar 8, 2023, 5:34 PM IST

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பேரிஜம் வனப்பகுதிகளில் பாலூட்டிகளின் முதன்மை இனமான சோலை மந்திகளின் (சிங்க வால் குரங்குகள்) எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வனத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொடைக்கானல் பேரிஜம் வனப்பகுதி, கடந்த கரோனா ஊரடங்கு காலகட்டத்தில் இருந்து, இரண்டு ஆண்டுகள், சுற்றுலாப் பயணிகள் உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்ட பகுதியாகும். 

அதன் பின்னர், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல், மீண்டும் பயணிகள் பார்வையிட செல்ல அனுமதியளிக்கப்பட்டது. இந்த இரண்டாண்டுகள், மனித நடமாட்டம் இல்லாமம் இருந்த இவ்வனப்பகுதிக்குள், முன்னர் இருந்ததை விட, சோலை மந்திகளின் இனப்பெருக்கம், அதிகரித்துள்ளதாக  வனத்துறை தகவல் தெரிவித்துள்ளது. 

பாலூட்டி இனங்களில், முதன்மை இனமாக ஆய்வாளர்களால் கருதப்படும் சோலை மந்திகள், மனித நடமாட்டம் இல்லாத இடத்தில் மட்டும் வாழக்கூடிய இயல்பை கொண்டவை. இவைகள் சோலை மரங்களின் விதைகளை, வனம் முழுவதும் பரப்புவதற்கு, பெரும்பங்கு ஆற்றுவதால், இவற்றின் இனங்களை காப்பது மிக முக்கியமாக பார்க்கபடுகிறது. 

ஏற்கனவே பேரிஜம் வனப்பகுதிக்குள், அன்னிய சவுக்கு மரங்களை அகற்றி, சோலை மரங்களை நடவு செய்யும் பணிகள் வனத்துறையால் தொடக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அதிகரித்துள்ள சோலை மந்திகளும், சோலை மர விதைகளை, அதிக அளவில் பரப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிங்க வால் குரங்குகள் அழிந்து வரும் உயிரினங்களில் ஒன்றாகும். 

இதையும் படிங்க: ஓடி வந்த யானை..குழந்தையை கண்டதும் திரும்பிச் சென்ற நெகிழ்ச்சி!

Last Updated : Mar 8, 2023, 5:34 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.