CM பிறந்தநாள் - 70 ரூபாய் ஹெல்மெட்டை சப்ளை செய்த காமெடி நடிகர் பெஞ்சமின் - Salem district news
🎬 Watch Now: Feature Video
முதலமைச்சர் ஸ்டாலினின் 70 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் திமுக தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர். பலரும் இலவசமாக டீ, பிரியாணி உள்ளிட்டவற்றை பொதுமக்களுக்கு வழங்கி வருகின்றனர். அந்த வகையில் சேலத்தில் 70 ரூபாய்க்கு ஹெல்மெட் வழங்கியுள்ளனர்.
இருசக்கர வாகனத்தில் பயணிக்கின்றபொழுது அனைவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்றும்; விபத்து இல்லா பயணம் மேற்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தியும் அரசு மற்றும் தன்னார்வ அமைப்பின் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாநில அளவில் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்த நாளை முன்னிட்டு சேலம் கோட்டை பகுதியில் அமைந்துள்ள ஜம்ஜம் ஹெல்மெட் கடையில் முதலமைச்சரின் 70ஆவது பிறந்த நாளை முன்னிட்டு 70 ரூபாய்க்கு ஹெல்மெட் விற்பனை நடைபெற்றுள்ளது.
இதை பிரபல நகைச்சுவை நடிகர் பெஞ்சமின் 70 ரூபாய்க்கு ஹெல்மெட் மற்றும் இனிப்புகளை வழங்கி, தொடங்கி வைத்தார். அப்போது, 70 நபர்களுக்கு ஹெல்மெட்கள் வழங்கப்பட்டன. முன்னதாகவே வாகன ஓட்டிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து டோக்கன் பெற்று இந்த 70 ரூபாய் ஹெல்மெட்டை பெற்றுச் சென்றனர்.
70 ரூபாய்க்கு ஹெல்மெட் கிடைக்கும் என்ற தகவல் அறிந்த ஏராளமான வாகன ஓட்டிகள் அந்தப் பகுதியில் திடீரென குவிந்ததால் பெரும் பரபரப்பு நிலவியது. அப்போது எடுக்கப்பட்ட காணொலி தற்போது வைரல் ஆகி வருகிறது.
இதையும் படிங்க: இலவசமாக டீ, சம்சா வழங்கி முதலமைச்சரின் பிறந்தநாளை கொண்டாடும் மாற்றுத்திறனாளி