தொடர்விடுமுறையால் வெளியூர்களுக்கு படையெடுக்கும் மக்கள்..போக்குவரத்து நெரிசலால் திணறிய தாம்பரம் - படையெடுக்கும் பொதுமக்கள்
🎬 Watch Now: Feature Video
Published : Oct 21, 2023, 10:43 PM IST
சென்னை: ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை விடுமுறை உள்ளிட்ட தொடர் விடுமுறையையொட்டி, நேற்றைய தினத்தில் அனைவரும் ஊர்களுக்கு சென்றனர். இதனால் சென்னையில் இருந்து, வெளிமாவட்டங்களுக்கு செல்ல இருக்கும் முக்கிய பகுதியான தாம்பரத்தில் இன்று (அக்.21) கடும் போக்குவரத்து நெரிசலானது (Heavy traffic jam in Chennai) ஏற்பட்டது.
சனி, ஞாயிறு, ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை என நான்கு நாட்கள் தொடர் விடுமுறை காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இருந்து சென்னை மற்றும் சென்னையின் புறநகர் பகுதிகளில் பணிபுரியவும் கல்லூரி படிப்பிற்காகவும் தங்கியிருந்த பொதுமக்கள் அவர்களின் சொந்த ஊர்களை நோக்கி தனியார் மற்றும் அரசு பேருந்துகள் மற்றும் சொந்த கார்களில் சென்று கொண்டிருப்பதால் பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், பெருங்களத்தூர் ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, பண்டிகையை கொண்டாடும் விதமாக குரோம்பேட்டை தனியார் வணிக வளாகங்களில் பொதுமக்கள் பொருட்களை வாங்க குவிந்து வருவதால், குரோம்பேட்டை, பல்லாவரம், தாம்பரம் சானிடோரியம் ஆகிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படுகிறது.
குரோம்பேட்டை, தாம்பரம் பகுதியில் போக்குவரத்து காவல்துறையினர் குறைந்த அளவே காணப்படுவதால் போக்குவரத்து நெரிசலை சீர்செய்வதில் தாமதம் ஏற்படுகிறது. இதனால், இதுபோன்ற பண்டிகை காலங்களில் முறையாக போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் அதிகப்படியான போக்குவரத்து காவலர்கள் ஈடுபட வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.