திருக்கடையூர் கோயிலில் ஜிவி பிரகாஷ் குடும்பத்தினருடன் சாமி தரிசனம்! - GV Prakash visited Thirukadaiyur temple
🎬 Watch Now: Feature Video
Published : Sep 1, 2023, 6:06 PM IST
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான உலக புகழ் பெற்ற ஸ்ரீ அபிராமி அம்மன் சமேத அமிர்தகடேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இது, மார்க்கண்டேயனுக்காக எமனை இறைவன் காலால் உதைத்து சம்ஹாரம் செய்த இடமாகும்.
அதனால் இங்கு ஆயுள் ஹோமங்கள், 60, 70, 80, 90,100 வயதுகளில் செய்யப்படும் சஷ்டியப்த பூர்த்தி சதாபிஷேகம், திருமணங்கள் தினமும் நடைபெறுவது வழக்கம். பல்வேறு சிறப்புகளை உடைய இந்த ஆலயத்தில் இன்று (செப். 01) பிரபல இசையமைப்பாளரான ஜி.வி. பிரகாஷ் தனது மனைவி சைந்தவி மற்றும் அவரது தந்தை வெங்கடேஷ் ஆகியோருடன் கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தார்.
அவருக்கு ஆலய நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து கள்ள வர்ண விநாயகர், ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர், கால சம்ஹார மூர்த்தி, அபிராமி அம்பாள் ஆகிய சன்னதிகளுக்குச் சென்று சிறப்பு வழிபாடு செய்தனர்.
இதையும் படிங்க: மலையாள நடிகை அபர்ணா நாயர் மர்மமான முறையில் உயிரிழப்பு?... போலீசார் விசாரணை