Theni - அமோக விளைச்சலில் வெள்ளை சோளம் - உரிய விலை கிடைக்க வாய்ப்பு என விவசாயிகள் நம்பிக்கை - Rainfed farmers
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/14-07-2023/640-480-19000064-thumbnail-16x9-agri.jpg)
தேனி: பெரியகுளம் பகுதியில் அதிக அளவில் மானாவாரி விவசாய நிலங்கள் உள்ளன. இந்த ஆண்டு கோடை மழை மற்றும் தென்மேற்குப்பருவ மழை தொடர்ந்து நன்றாக பெய்து வந்ததால், மானாவாரி விவசாயிகள் அதிக அளவில் மானாவாரி பயிர்களான சோளம், கம்பு ஆகியவற்றைப் பயிரிட்டனர்.
இதில் லெட்சுமிபுரம், வடபுதுப்பட்டி, காமக்காபட்டி, ஜல்லிபட்டி, சில்வார்பட்டி உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் உள்ள மானாவாரி நிலங்களில் வெள்ளை சோளம், இரும்புச் சோளம், எள், பச்சைப் பயிறு, தட்டைப் பயிறு, கேப்பை போன்ற தானியங்களை விவசாயிகள் அதிக அளவில் பயிரிட்டுள்ளனர். இந்நிலையில் 90 நாட்கள் பயிரான வெள்ளை சோளத்திற்குத் தொடர்ச்சியாக நல்ல மழை பெய்ததால், வெள்ளை சோளம் நல்ல விளைச்சல் அடைந்து அறுவடைக்குத் தயாராகி வருகிறது.
தற்பொழுது பழங்கால சிறுதானிய வகைகளுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்புள்ளதால், இது போன்ற தானிய வகைகளை மானாவாரி விவசாயிகள் அதிக அளவில் பயிரிட்டு வருகின்றனர். எனவே, அறுவடை செய்ய 15 முதல் 20 நாட்கள் உள்ள நிலையில் இந்த ஆண்டு நல்ல மகசூலுடன், நல்ல விலையும் கிடைக்கும் என விவசாயிகள் நம்பிக்கைத் தெரிவிக்கின்றனர். மேலும், தொடர் மழையால் மானாவாரி விவசாயத்தில் வெள்ளை சோளம் அமோக விளைச்சலுடன் அறுவடைக்குத் தயாராகி விட்டதாக தெரிவித்தனர்.
இதையும் படிங்க:Tenkasi: குறைதீர் கூட்டத்தில் அவமதிப்பு - சோசியல் மீடியாவில் லைவ் செய்த திருநங்கைகள்