புனித வெள்ளி : தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை! - புனித வெள்ளி
🎬 Watch Now: Feature Video
ராணிப்பேட்டை: இயேசு கிறிஸ்து சிலுவையில் பட்ட பாடுகளையும், சிலுவையில் அறையப்பட்டு உயிர் நீத்த நாளையும் புனித வெள்ளி நாளாக அனுசரிக்கப்படுகிறது. மேலும் மூன்றாம் நாள் அவர் உயிரோடு எழுந்த நாள் ஈஸ்டர் திருநாளாக கொண்டாடப்படுகிறது.
அதன்படி, ராணிபேட்டையில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை ஆலயம், சேத்துப்பட்டு புனித லூர்து அன்னை ஆலயத்தில் புனித வெள்ளி சிறப்பு ஆராதனை நடைபெற்றது. திருப்பலியை தொடர்ந்து திருச்சிலுவை பாதை நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் இயேசு கிறிஸ்து அனுபவித்த திருச்சிலுவை பாடுகள் குறித்து சிறப்பு மரையுறை வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அங்குள்ள ஸ்தலங்களில் திருச்சிலுவை பாதை நடைபெற்றது. தொடர்ந்து தியானத்துடன் பாடல்கள் பாடப்பட்டு சிறப்பு புனித வெள்ளி பிரார்த்தனை நிகழ்ச்சி அனுசரிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் முழுவதும் உள்ள லாலாப்பேட்டை, அம்மூர் வாலாஜாப்பேட்டை, அணைக்கட்டு, இலங்கை அகதிகள் முகாம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 500க்கும் மேற்பட்ட கிறிஸ்தவ மக்கள் கலந்து கொண்டனர்.
திருச்சிலுவையை பெண்கள் மற்றும் வயதான முதியவர்கள் தங்களுடைய தோளில் சம்பந்தபடி ஊர்வலமாக சென்றனர். முக்கிய வீதிகளில் இயேசு கிறிஸ்தின் பாடல்களை பாடியபடி சென்றனர். இதனை தொடர்ந்து புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் அனைத்து கிறிஸ்தவர்களும் இந்த புனித வெள்ளியை முன்னிட்டு சிறப்பு பிரார்த்தனை திருச்சிலுவையை முத்தமிடும் நிகழ்வுகளில் ஈடுபட்டனர்.