Sankashti Chaturthi: சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு தேனி சித்தி விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம்! - ஸ்ரீசித்தி விநாயகர் திருக்கோயிலில் அபிஷேகம்
🎬 Watch Now: Feature Video
தேனி: முழுமுதற் கடவுள் என போற்றப்படும் விநாயகருக்கு மாதந்தோரும் வரும் சங்கடஹர சதுர்த்தி மிகவும் சிறப்பு வாய்ந்தது ஆகும். அந்த நாளில் விநாயகருக்கு விரதம் இருந்து விநாயகரை துதித்து தும்பியுடையான் மீது நம்பிக்கை வைத்தால் கைவிடமாட்டான் என்பது ஐதீகம்.
இந்நிலையில், தேனி மாவட்டம் பொம்மையகவுண்டன்பட்டியில் ஸ்ரீ சித்தி விநாயகர் திருக்கோயிலில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக சித்தி விநாயகருக்கு பால், தயிர், சந்தனம், தேன், இளநீர், மஞ்சள், பழங்கள் உள்ளிட்ட அபிஷேகப் பொருட்கள் கொண்டு சிறப்பாக அபிஷேகம் நடைபெற்றது.
அதன் பின்னர், வண்ண மலர் மாலைகளால் விநாயகருக்கு சிறப்பாக அலங்காரம் செய்யப்பட்டு, மூலவர் விநாயகர் கருவறையில் விநாயகர் பின்புறம் ஒலி தெரிவது போல் காட்சிப்படுத்தி இருந்தது. அதைத் தொடர்ந்து, அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீ சித்தி விநாயகருக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் தேனி மாவட்டம் மட்டுமின்றி அண்டை மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.