14 அடி உயர கோழிகுத்தி வானமுட்டி பெருமாள் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு - கோழிகுத்தி
🎬 Watch Now: Feature Video
மயிலாடுதுறையை அடுத்த கோழிகுத்தி கிராமத்தில் பழமை வாய்ந்த ஸ்ரீ தயாலெஷ்மி சமேத ஸ்ரீ சீனிவாச பெருமாள் என்கிற வானமுட்டி பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இந்த ஆலயம் 14 அடி உயரத்தில் ஒரே அத்தி மரத்தால் மூலவர் சிலை அமைந்துள்ளது. புகழ்பெற்ற இந்த ஆலயத்தில் இன்று வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவசல் திறப்பு விழா நடைபெற்றது. பின்னர் மூலவர் வானமுட்டி பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மகாதீபராதனை காட்டப்பட்டது. இதனை ஏராளமான பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர்.
Last Updated : Feb 3, 2023, 8:38 PM IST