சிறுவர் பூங்காவாக மாற்றப்பட்ட குப்பை கிடங்கு... திருப்பத்தூர் மாவட்டத்திற்கு எடுத்துக்காட்டாய் திகழும் கிராமம்!
🎬 Watch Now: Feature Video
திருப்பத்தூர்: வாணியம்பாடி அடுத்த அம்பலூர் கிராமத்தில் மக்கள் பாலாறு கரையோர பகுதியை பல ஆண்டுகளாக குப்பைகளை கொட்டும் இடமாக பயன்படுத்தி வந்துள்ளனர். இந்நிலையில் அம்பலூர் ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட முருகேசன் மாற்ற ஊராட்சி மன்ற உறுப்பினர்களுடன் இணைந்து தனது கிராமத்தை மாவட்டத்தில் முன்னிலை கிராமமாக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதில் ஒரு பகுதியாக பாலாறு கரையோரம் உள்ள குப்பைகளை அகற்றி அந்த இடத்தில் சிறுவர்கள் விளையாட விளையாட்டு உகரணங்களுடன் கூடிய சிறுவர் பூங்காவை கிராம மக்கள் உதவியுடன் அம்பலூர் ஊராட்சி மன்ற நிர்வாகத்தினர் அமைத்துள்ளனர். இந்த சிறுவர் பூங்காவை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் அம்பலூர் ஊராட்சியை சேர்ந்த சிறுவர்களை வைத்து ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். பின்னர் சிறுவர்களை ஊஞ்சலில் அமர வைத்து ஊஞ்சலாட்டி சிறுவர்களை மகிழ்வித்தார்.
பின்னர் இதுகுறித்து ஊராட்சி மன்ற தலைவர் முருகேசன் கூறுகையில், ”இந்த அம்பலூர் ஊராட்சியில் பொழுதுபோக்கும் விதமாக எந்த ஒரு இடமும் இல்லாதிருந்த நிலையில் பாலாறு கரையோரம் உள்ள குப்பை கொட்டும் இடத்தை 6 மாத காலம் சீர் செய்து தற்போது சிறுவர்கள் விளையாட ஊராட்சி மன்றத்தின் சார்பாக பூங்காவாக மாற்றப்பட்டுள்ளது. மேலும் இந்த பூங்காவில் ஆலமரம், அரசமரம், புங்கைமரம், புளியமரம், வேப்பமரம், நாவல்மரம் போன்ற 25 வகையான மரங்கன்றுகளை ஊராட்சி மன்ற நிர்வாகத்தினர் மற்றும் கிராம மக்கள் நட்டு வைத்துள்ளனர்.
இதனால் இப்பகுதியில் காற்று மாசுபாடு குறைந்து மக்கள் சுத்தமான காற்றை சுவாசிக்கும் சூழல் உள்ளதாக” ஊராட்சி மன்ற தலைவர் முருகேசன் தெரிவித்தார்.
இதையும் படிங்க: Tasmac: வாணியம்பாடியில் டாஸ்மாக் பார்களுக்கு அதிரடி சீல்!