நண்பரின் பிறந்த நாளில் 'கண் தானம்' - மயிலாடுதுறை 'கில்லி' குழுவுக்கு குவியும் வாழ்த்து! - mayiladuthurai friends eye donation

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Apr 12, 2023, 6:20 PM IST

மயிலாடுதுறை: மயிலாடுதுறையைச் சேர்ந்த இளைஞர் கில்லி பிரகாஷ். இவர் தனது 36-ஆவது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். எந்நேரமும் நண்பர்கள் வட்டாரத்துடன் சுற்றித் திரியும் பிரகாஷ் எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பதால் அவரை நண்பர்கள் கில்லி என்று அடைமொழிப் பெயர் வைத்து கில்லி பிரகாஷ் என அழைக்கின்றனர். 

இந்நிலையில் இந்த வருடம் இவரின் பிறந்த நாளை புதுமையாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகக் கொண்டாட அவரது நண்பர்கள் முடிவு செய்தனர். வருடா வருடம் இரத்ததானம் வழங்கியும், ஏழை மக்களுக்கு உணவு உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கியும், ஆதரவற்ற குழந்தைகள் உள்ள காப்பகங்களில் உணவு வழங்கி கொண்டாடும் அவரது நண்பர்கள் இந்த வருடம் கண்தானம் செய்ய முடிவெடுத்தனர்.

இதையடுத்து மயிலாடுதுறை அரசு மருத்துவமனை அருகில் உள்ள (அன்னை) தனியார் கண் மருத்துவமனையில் பிரகாஷின் நண்பர்கள் 16 பேர் கண் தானம் செய்ய ஒப்புதல் அளித்து, அதற்கான படிவத்தில் கையெழுத்திட்டு வழங்கி உள்ளனர். நண்பரின் பிறந்த நாளுக்காக சக நண்பர்கள் கண் தானம் வழங்க முன் வந்தது சிறந்த முன்னுதாரணத்தை ஏற்படுத்தியதுடன், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது. 

முன்னதாக கண் மருத்துவர் தாமஸ் இந்த செயலை ஊக்கப்படுத்தும் வகையிலும் நன்றி தெரிவிக்கும் வகையிலும் பிரகாஷ்க்கு சால்வை அணிவித்து தனது பிறந்தநாள் வாழ்த்தைத் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து அவரது நண்பர்களுக்குக் கண்தானம் செய்வதற்கான படிவத்தையும் வழங்கி பாராட்டுகளைத் தெரிவித்தார்.இந்த நெகிழ்ச்சி சம்பவம் அப்பகுதி மக்களிடையே விழிப்புணர்வுடன் பெரும் வரவேற்பையும் பெற்றுள்ளது.

இதையும் படிங்க: Corona Virus: கரோனா பாதிக்கப்பட்டவருக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பது எப்படி?

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.