ஆரணியில் கனமழை காரணமாக கமண்டல நதியில் வெள்ளப்பெருக்கு!
🎬 Watch Now: Feature Video
திருவண்ணாமலை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கி பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும் சென்னை, வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த 4 நாட்களாக கனமழை பெய்து வருகின்றது. மேலும், இன்னும் சில நாட்கள் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், ஜமுனாமுத்தூர் மலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, ஆரணி வழியாகச் செல்லும் கமண்டல நாக நதியில் இன்று திடீரென வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. கமண்டல நதியில் இரு கரைகளையும் தொட்டுச் செல்லும் வெள்ள நீரால் ஆரணி, கண்ணமங்கலம், அம்மாபாளையம், குன்னத்தூர், சேவூர் உள்ளிட்ட 40 ஏரிகள் நிரம்புவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
கடந்த 2 ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போதுதான் ஆரணி கமண்டல நாக நதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது என கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். மேலும், ஆற்றை யாரும் கடக்க வேண்டாம் எனவும், கரையோரப் பகுதி மக்கள் கவனமாக இருக்க வேண்டும் எனவும் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.