தஞ்சை பாபநாசம் புனித அந்தோணியார் ஆலய கொடியேற்று விழா! - etv bharat tamil
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/640-480-17698068-thumbnail-4x3-st.jpg)
தஞ்சாவூர்: பாபநாசம் புனித அந்தோணியார் ஆலயத்தின் திருவிழா வருகிற 14ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், கொடியேற்ற விழா செவ்வாய் இரவு நடைபெற்றது. இதில் புனித அந்தோணியாரின் திருக்கொடி பாபநாசம் கடை வீதியின் முக்கிய வழியாக ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. புனித செபஸ்தியார் ஆலயத்தின் பங்கு தந்தை கோஸ்மான் ஆரோக்கியராஜ் கொடியை ஏற்றினார். அதன் பின்பு திருப்பலி நிறைவேற்றப்பட்டு பக்தர்களுக்கு ஆசீர்வாதம் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்து கொண்டாடினர்.
Last Updated : Feb 14, 2023, 11:34 AM IST