400 ஆண்டுகள் பழமையான மரத்திற்கு தீவைப்பு.. தேனியில் நடந்தது என்ன? - 400 years old tree fire news
🎬 Watch Now: Feature Video
தேனி: பெரிய குளத்தில் சோழர் காலத்தில் கட்டப்பட்ட பாலசுப்பிர மணியன் கோயிலுக்கு பின்புறத்தில் தீர்த்த தொட்டியும், அதன் அருகே 2 மருத மரங்களும் இருந்தன. தற்போது இந்த மரங்களின் வயது சுமார் 400 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்ததாக இருக்கும் என கூறப்படுகிறது.
கடந்த சில தினங்களாக மருத மரத்தின் வேர் பகுதியில் தீ பற்றி எரிந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மரத்தின் வேர் பகுதி முழுவதுமாக எரிந்து மரம் அடியோடு சாய்ந்து விழுந்தது. தீயணைப்புதுறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டதை தொடர்ந்து சாய்ந்து விழுந்த மருத மரத்தில் பற்றி எரிந்த தீயை தீயணைப்புத் துறையினர் நீரை பாய்ச்சி அடித்து தீயை அனைத்தனர்.
மேலும், மருத மரத்தின் பட்டை மருத்துவ குணம் வாய்ந்ததால் அவற்றை வெட்டி எடுப்பதற்காக சமூக விரோதிகள் அதில் தீ வைத்து எரித்து சாய்த்து உள்ளனரா? 400 ஆண்டுகள் பழமையான அரிய வகை மரமான மருத மரத்தை தீ வைத்து சாய்த்த சமூக விரோதிகளை கண்டுபிடிக்க வேண்டும். மேலும் இது போன்ற மரங்களை பாதுகாக்கப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க:சொந்த வீடு வாங்குவோருக்கு பதிவுக் கட்டணம் உயருமா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த பதிவுத்துறை!