நெய்வேலி சுரங்கத்தில் திடீர் தீ விபத்து.. கான்வேயர் பெல்ட் எரிந்து சேதம்! - Conveyor belt machine
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/19-12-2023/640-480-20307103-thumbnail-16x9-cdl.jpg)
![ETV Bharat Tamil Nadu Team](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/authors/tamilnadu-1716535724.jpeg)
Published : Dec 19, 2023, 6:38 PM IST
கடலூர்: நெய்வேலி என்எல்சி இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் சுரங்கம் 1, சுரங்கம் 1 விரிவாக்கம் மற்றும் சுரங்கம் 2 என மூன்று திறந்தவெளி சுரங்கங்கள் மூலம் பழுப்பு நிலக்கரி வெட்டியெடுக்கப்பட்டு மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், இன்று (டிச.19) மதியம் சுரங்கம் இரண்டில் நிலக்கரி வெட்டி எடுத்துச் செல்லும் கன்வேயர் பெல்ட் இயந்திரத்தில் திடீரென தீப்பற்றியதில், இயந்திரம் முழுவதும் எரிந்து சேதமானது. பின்னர், உடனடியாக தீ விபத்து குறித்து என்எல்சி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், தீயை ஒரு மணி நேரம் போராடி கட்டுக்குள் கொண்டு வந்தனர். எதிர்பாராத விதமாக சுரங்கத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், இந்த விபத்தில் எந்த ஒரு உயிர்தேசமும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தீ விபத்திற்கான காரணம் குறித்து, என்எல்சி நிறுவனம் தரப்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் தற்பொழுது சுரங்கத்தில் இருந்து அனல் மின் நிலையத்திற்கு நிலக்கரி கொண்டு செல்லும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.