மண்குழியில் சிக்கி தவித்த வடமாநில இளைஞரை மீட்ட சத்தியமங்கலம் தீயணைப்பு வீரர்கள்! - rescued youth

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jun 25, 2023, 10:24 PM IST

ஈரோடு: சத்தியமங்கலம் அடுத்த தாசப்பகவுண்டர் புதூரில் இருந்து கே.என்.பாளையம் செல்லும் இந்திரா நினைவு குடியிருப்பு நகர்ப் பகுதியில் பாலம் அமைப்பதற்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணியில் வடமாநில தொழிலாளர்கள் பலரும் ஈடுபட்டிருந்தனர். இந்த சூழலில் பாலத்தின் காங்கிரீட் கம்பிகள் கட்டிக்கொண்டிருக்கும் போது எதிர்பாராதவிதமாக ஜார்கண்ட் மாநில தொழிலாளர் விகாஸ் மோர்கி அங்குத் தோண்டப்பட்டிருந்த மண் குழியில் விழுந்துள்ளார்.

இதைப் பார்த்த சக தொழிலாளர்கள் அவரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் கான்கிரீட் சுவருக்கு அடியில் உள்ள மண் குழியில் சிக்கிக் கொண்டதால் அவரை மீட்க முடியாமல் தவித்தனர். இந்நிலையில் இளைஞருக்கு மூச்சுத் திணறல் ஏறப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடியுள்ளார்.

இது குறித்து சத்தியமங்கலம் தீயணைப்பு நிலையத்துக்கு உடனே தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் ரங்கநாதன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் குவிந்து கிடந்த மண் குவியலை ஜேசிபி மூலம் அகற்றினர். பின்னர் மண் சரிந்து விழாத வகையில், அவரை காப்பாற்றும் நோக்கில் மிகுந்த சிரமத்துக்கிடையே இடிபாடுகளுக்கு நடுவில் சிக்கிய வடமாநில இளைஞரைக் கயிறு கட்டி பத்திரமாக மீட்டனர். 

மயக்கநிலையிலிருந்த அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சிகிச்சைக்காக அனுமதித்து உள்ளனர். தற்போது  இளைஞர் நலமுடம் இருப்பதாக மீட்பு குழுவினர் தெரிவித்தனர். மண்குழியில் சிக்கியவரைப் பத்திரமாக மீட்ட தீயணைப்பு வீரர்களுக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

இதையும் படிங்க:வீடியோவிற்காக கிணற்றில் குதித்த இளைஞர்; நீச்சல் தெரியாததால் பலியான சோகம்!

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.