2024 புத்தாண்டு: பண்ணாரி அம்மன் கோயிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம் - பண்ணாரி கோயில்
🎬 Watch Now: Feature Video
Published : Jan 2, 2024, 9:23 AM IST
ஈரோடு: சத்தியமங்கலம் அடுத்த மைசூர் நெடுஞ்சாலை பகுதியில் அமைந்துள்ளது, பிரசித்தி பெற்ற ஸ்ரீபண்ணாரி மாரியம்மன் கோயில். இந்த கோயிலுக்கு ஈரோடு, திருப்பூர், கோவை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கர்நாடகா மற்றும் கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம்.
இந்நிலையில், நேற்று (ஜன.1) ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, காலை முதலே கோயிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரித்து காணப்பட்டது. குறிப்பாக, ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு பண்ணாரி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மேலும், கோயிலுக்கு வந்த பக்தர்கள் கோயில் வளாகத்தில் உள்ள குண்டத்திற்கு உப்பு, மிளகு போன்றவை தூவி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.
2024 ஆங்கில புத்தாண்டு மற்றும் விடுமுறை நாட்கள் என்பதால் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டதாக கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், பண்ணாரி அம்மன் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களின் வசதிக்காக, சத்தியமங்கலம் மற்றும் புஞ்சைப் புளியம்பட்டியில் உள்ளிட்ட பகுதியில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதனையொட்டி, பண்ணாரி மாரியம்மன் கோயில் பகுதி முழுவதும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.