Bannari Mariamman Temple: சத்தி பண்ணாரி அம்மனுக்கு லட்சங்களில் குவிந்த காணிக்கை! - erode news
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/640-480-17723749-thumbnail-4x3-bannari.jpg)
ஈரோடு: சத்தியமங்கலம் வனப்பகுதியில் உள்ள பண்ணாரி அம்மன் கோயிலில் உள்ள உண்டியல்களில் பக்தர்கள் செலுத்திய காணிக்கைகள் மாதந்தோறும் எண்ணப்படுவது வழக்கமாகும். அதன்படி கோயில் துணை ஆணையர் மேனகா மற்றும் கோயில் பரம்பரை அறங்காவலர்கள் முன்னிலையில் நேற்று உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணப்பட்டன.
காணிக்கையாக 81.84 லட்சம் ரூபாய் ரொக்கம், 460 கிராம் தங்கம், 960 கிராம் வெள்ளி ஆகியவற்றை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளதாக கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் திருக்கோயில் பணியாளர்கள், கல்லூரி, பள்ளி மாணவர்கள், ராஜன் நகர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஊழியர்கள் ஈடுபட்டனர்.