''இனி எங்கள் சிங்கத்தின் கர்ஜனையே'' ஓபிஎஸ்ஸை கேலி செய்யும் வகையில் ஈபிஎஸ் தரப்பினர் ஒட்டிய போஸ்டர்! - சென்னை மாவட்ட செய்தி
🎬 Watch Now: Feature Video
சென்னை: அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ. பன்னீர்செல்வம் அணியினர் நேற்று திருச்சியில் மாநாடு நடத்தினர். இந்நிலையில் அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் செங்கல்பட்டு மேற்கு மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி சார்பில், மாவட்ட இளைஞரணி செயலாளர் புருஷோத்தமன் ஏற்பாட்டில் நிர்வாகிகள் தாம்பரம், பல்லாவரம் உட்பட பல்வேறு சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுவரொட்டிகளை ஒட்டி உள்ளனர்.
அதில் ஓ. பன்னீர்செல்வம் நேற்று மாநாடு நடத்திய நிலையில், அவரை மறைமுகமாக எதிர்க்கும் வகையில் "நாய் அழுதாலும் நரி ஊளையிட்டாலும் இனி எங்கள் சிங்கத்தின் கர்ஜனையே நாங்கள் கண்ட எங்கள் புரட்சித்தலைவரே" என்ற வாசகத்துடன் எம்ஜிஆரை போன்று தொப்பி, கருப்பு கண்ணாடி அணிந்த படி உள்ள எடப்பாடி பழனிசாமியின் உருவப்படம் அச்சடித்து ஒட்டியுள்ளனர்.
இதில் மாவட்டச் செயலாளர் சிட்லப்பாக்கம் ராஜேந்திரன் பெயரும் இடம் பெற்றுள்ளது. இந்த வாசகம் அடங்கிய சுவரொட்டிகளை ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் படித்து புலம்பி வருகின்றனர். இந்த சுவரொட்டியால் ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் இடையே பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: மனிதனின் மண்டை ஓட்டை 3டி முறையில் டைட்டானியத்தில் செய்து பொருத்திய அரசு மருத்துவமனை