புதுச்சேரி பொதுப் பணித்துறையால் நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் தற்கொலை மிரட்டல் போராட்டம்
🎬 Watch Now: Feature Video
புதுச்சேரியில் கடந்த என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியின் போது பொதுப்பணித்துறையில் ஏராளமானோர் பணியில் அமர்த்தப்பட்டனர். 3 மாதம் பணி செய்த அவர்களை தேர்தல் துறையானது பணியிலிருந்து நீக்கியது. அதன் பின்னர் பொதுப்பணித்துறையால் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் போராட்டக் குழு ஒன்றை உருவாக்கினர்.
அந்த போராட்டக் குழு பல வருடங்களாக தங்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று (மார்ச் 24) சங்கத் தலைவர் தெய்வீகன் தலைமையில், மூலகுளம் எம்.ஜி.ஆர் நகரில் உள்ள தண்ணீர் டேங்க் மீது ஏறி நின்று பெட்ரோல் கேனுடன் ஏறி தற்கொலை மிரட்டல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து 200க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தங்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் எனக்கோரி முதலமைச்சரை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று கைது செய்தனர்.
இதையும் படிங்க: ரேஷன் கடை விவகாரம் - முதலமைச்சர் வீட்டை முற்றுகையிட்டதால் பரபரப்பு