சாத்தான்குளத்தில் தொடர் கனமழை: சரிந்த டிரான்ஸ்பார்மர்கள்.. மின் வாரிய ஊழியர்கள் அலட்சியம் என மக்கள் புகார்! - அமுதூண்ணாங்குடி
🎬 Watch Now: Feature Video
Published : Nov 19, 2023, 7:49 PM IST
|Updated : Nov 20, 2023, 9:22 AM IST
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள அமுதூண்ணாகுடி பகுதியில் கடந்த மூன்று வாரங்களுக்கு முன்பு புதிய மின் கம்பம் நடப்பட்டது. முன்னதாக, சேதமான மின்கம்பத்தை மாற்றி அமைக்கும் போது மின் கம்பத்தின் கீழ் கான்கிரீட் கலவை போடாமல் மின் வாரிய தொழிலாளர்கள் மின்கம்பத்தை நட்டு வைத்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் தூத்துக்குடி மற்றும் சாத்தான்குளம் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையின் காரணமாக அமுதூண்ணாங்குடி பகுதியில் புதிதாக நடப்பட்ட டிரான்ஸ்பார்மர் சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
ஏற்கனவே, இந்த டிரான்ஸ்பார்மரில் மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்தபோது தற்போது சரிந்து விழுந்ததால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மின்வாரியத்திற்குத் தகவல் தெரிவித்து உள்ளனர். அந்த தகவலின் அடிப்படையில் மின்வாரியத் துறையினர் மின் இணைப்பைத் துண்டித்து உள்ளனர். ஆனால் மின்வாரியத் துறையினர் இதுவரை சம்பவ இடத்திற்கு வரவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.