CCTV:சைக்கிள் மீது கார் மோதிய விபத்து: 8 வயது சிறுவன் உயிரிழப்பு - A boy died on the spot when a car hit him
🎬 Watch Now: Feature Video
கோவை: போத்தனூர் வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த பாஷீத் இவரது மகன் ரைஃபுதீன்(8). ரைஃபுதீன் கடந்த ஞாயிறு அன்று அவர் வசிக்கும் தெருவில் சைக்கிள் ஓட்டி விளையாடிக் கொண்டிருந்தார். அந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த சையது முகமது, காரை பார்க்கிங் செய்து கொண்டிருந்தார்.
அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் சைக்கிள் ஓட்டி வந்த சிறுவன் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில் அருகில் இருந்த வீட்டின் தடுப்பு சுவற்றுக்கும் காருக்கும் இடையில் சிக்கிய சிறுவனை அருகே உள்ள பொதுமக்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே சிறுவன் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனிடையே இச்சம்பவம் தொடர்பாக சாலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சையத் முகமது மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.