Video:ஈரோட்டில் கிரேன் மூலம் எடப்பாடி பழனிசாமிக்கு ராட்சத மாலை தந்து உற்சாக வரவேற்பு - Edappadi
🎬 Watch Now: Feature Video
ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறுவதையொட்டி அதிமுக, திமுக இறுதி பிரசாரத்தில் நேற்று ஈடுபட்டனர். நெரிக்கல் மேடு என்ற இடத்தில் அதிமுக வேட்பாளர் தென்னரசை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரித்தார். அப்போது பெண்கள் மலர்த் தூவி உற்சாகமாக வரவேற்றனர்.
அங்குள்ள பெண்களுக்கு சில்வர் தட்டு பரிசுப்பொருளாக வழங்கப்பட்டது. மேலும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆளுயர மாலை அணிவித்து வரவேற்பு அளிக்க முடிவு செய்த நிலையில், அவர் பிரசார வேனை விட்டு கீழே இறங்காததால் கிரேன் மூலம் ஆள் உயர மாலை அவருக்கு அணிவிக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து மக்கள் ஆட்டம், பாட்டம் கொண்டாட்டத்துடன் அதிமுகவுக்கு வாக்கு சேகரித்தனர்.
எடப்பாடி பழனிசாமிக்கு அணிவிக்கப்பட்ட மாலையை அதிமுக தொண்டர்கள் செல்ஃபி எடுத்துக் கொண்டு மகிழ்ந்தனர்.
இதையும் படிங்க:கடலூரில் ரூ.26 லட்சம் பறிமுதல்: ஹவாலா பணமா என தீவிர விசாரணை
TAGGED:
Erode by election