பழனி முருகன் கோயிலில் துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம்! - Durga Stalin Sami Darshan
🎬 Watch Now: Feature Video
திண்டுக்கல்: அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் மிகவும் பிரசித்திப் பெற்றது. இந்தக் கோயிலுக்கு நாள் தோறும் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். அந்த வகையில் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் இன்று மதியம் சாமி தரிசனம் செய்வதற்காக கார் மூலமாக வருகை தந்தார்.
தனியார் விடுதியில் சிறிது நேரம் ஓய்வு எடுத்து விட்டு மலைக் கோயிலுக்கு ரோப் கார் மூலமாக சென்ற அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. மலைக் கோயிலில் உள்ள ஆனந்த விநாயகரை வணங்கியு துர்கா ஸ்டாலின் பின் 12 மணிக்கு உச்சி கால பூஜையில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். பின்னர் கோயில் நிர்வாகம் சார்பில் துர்கா ஸ்டாலிக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. அதனை தொடர்ந்து ரோப் கார் வழியாக கீழே இறங்கி புறப்பட்டு சென்றார்.