கோடை வெயில் தாக்கம் - சின்னாற்றில் குளித்து மகிழ்ந்த யானைக் கூட்டம்! - கோடை வெயில் தாக்கம்
🎬 Watch Now: Feature Video
தருமபுரி: கிருஷ்ணகிரி - தருமபுரி மாவட்ட எல்லைகளான பாலக்கோடு, மாரண்டஹள்ளி, தேன்கனிக்கோட்டை, தளி, ஒகேனக்கல், பென்னாகரம் உள்ளிட்டப் பகுதிகளில் யானைகள் நடமாட்டம் உள்ளது. கோடை காலங்களில் உணவு மற்றும் தண்ணீர் தேடி யானைகள் கிராமப்புறங்களை நோக்கி வருவது வழக்கமாக இருந்து வருகிறது.
இந்நிலையில் யானைகள் வெளியேறுவதைத் தடுப்பதற்கு வன ஊழியர்கள் தொடர்ந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் யானைகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியை விட்டு வெளியேறுவதைத் தடுப்பதற்காக வனப்பகுதிகளில் ஆங்காங்கே குளம், குடிநீர் தொட்டிகள் அமைத்து சோலார் மூலம் தண்ணீர் நிரப்பப்பட்டு வருகிறது.
மேலும், வனப்பகுதியின் நடுவே காவிரி மற்றும் சின்னாறு இருப்பதால் யானைகள் தாகம் தீர்த்துக்கொள்ள ஆற்றில் தண்ணீர் குடிப்பதும் குளிப்பதுமாக இருந்து வருகிறது. ஒகேனக்கல் வனப்பகுதிக்குட்பட்ட கோடுப்பட்டி அருகே சின்னாற்றில் தினமும் தாகம் தீர்த்துக்கொள்ள யானைகள் கூட்டம் வந்து செல்கிறது.
குட்டிகளுடன் பத்துக்கும் மேற்பட்ட யானைகள் சின்னாற்றில் கோடை வெயிலை சமாளிப்பதற்கு குதூகலமாக குளித்து மகிழ்ந்து வருகிறது. தருமபுரி மாவட்டத்தில் தினமும் 100 டிகிரி வரை கோடை வெப்பம் வீசி வருவதால், இந்த வெயிலைச் சமாளிப்பதற்காக மணிக்கணக்கில் யானைகள் கூட்டம் சின்னாற்றில் குளித்து வருகிறது. சின்னாற்றில் யானைகள் குளித்து வரும் காட்சிகளை வனப்பகுதியில் வனத்துறையினர் சமூக வலை தளங்களில் பதிவிடுகின்றனர்.
இதையும் படிங்க: யானை தாக்கி விவசாயி பலி - யானைகளை விரட்டும் முயற்சியில் வனத்துறை தீவிரம்!