மிக்ஜாம் புயல் எதிரொலி: ஆவடியில் திரும்பும் திசை எல்லாம் மழை வெள்ளம்..! - due to Cyclone Michaung avadi is flooded
🎬 Watch Now: Feature Video
Published : Dec 4, 2023, 5:28 PM IST
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மிக்ஜாம் புயலின் எதிரொலியாக கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சென்னை முழுவதும் பெருமளவில் மழை நீர் தேங்கி வெள்ளக் காடாக காட்சிளிக்கின்றன.
இதனால் ஒருபுறம் பொதுமக்கள் குடியிருப்புகளை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். மறுபுறரம் வீடுகளுக்குள் இருக்கும் பொருட்களை எல்லாம் பாதுகாக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட அண்ணனூர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, திருமுல்லைவாயல், பட்டாபிராம், தென்றல் நகர், சென்னை-திருப்பதி நெடுஞ்சாலை, சேக்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
அதிலும் அண்ணனூர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளுக்குள் மழை நீர் நுழைந்துள்ளது. இதனால் அந்த குடியிருப்பில் உள்ள வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் உடமைகள் நீரில் மிதக்கின்றன.
மேலும் சில பகுதிகளில் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க கூட வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. ஆங்காங்கே சாலைகளில் மரம் முறிந்து விழுந்து கிடப்பதாலும், சாலையில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தாளும் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.