அரசுப்பள்ளி மாணவிக்கு இயற்கை மருத்துவப் படிப்புக்கான செலவை ஏற்றார் டாக்டர். சௌந்தர ராஜன்! - Dr Soundara Rajan
🎬 Watch Now: Feature Video
வேலூர் மாவட்டம்: குடியாத்தம் அடுத்த செதுக்கரை பகுதியைச் சேர்ந்த பீடி கூலித் தொழிலாளியான மல்லிகார்ஜுனா என்பவரது மகள் பூவிழி. இவர் குடியாத்தம் அரசு நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வந்தார். தற்போது நடைபெற்ற பொதுத் தேர்வில் 600க்கு 535 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் மூன்றாம் இடத்தைப் பிடித்தார். இதன் இடையே மருத்துவம் படிக்க வேண்டும் என்ற ஆசை மாணவி பூவிழிக்கு ஏற்பட்டு உள்ளது.
இதன் காரணமாக மாணவியின் குறிக்கோள் குறித்து குடியாத்தம், காக்கா தோப்பு பகுதியில் உள்ள அத்தி இயற்கை மற்றும் யோகா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் தலைவர் டாக்டர். சௌந்தர ராஜன் (புதுச்சேரி மாநில ஆளுநர் தமிழிசையின் கணவர்) அவரிடம் தங்கள் விருப்பத்தை தெரிவித்து உள்ளனர். இதனை அடுத்து இயற்கை மருத்துவப் படிப்பிற்கான ஐந்தரை ஆண்டுகளுக்கான (BNYS) முழுச் செலவையும் டாக்டர் சௌந்தர ராஜன் ஏற்றுக்கொண்டார்.
டாக்டர் சௌந்தர ராஜன் மாணவி கல்லூரியில் சேர்வதற்கான இலவச ஆணையை வழங்கினார். மேலும் இதே போன்று கிராமப் புறங்களில் படிக்கும் பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களும் மருத்துவம் பயின்று மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார். மேலும் இது குறித்து பேசிய மாணவி பூவிழி தாங்கள் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்றும்; தாங்கள் மிகவும் கஷ்டப்பட்டு தான் படித்ததாகவும் தற்போது இயற்கை மற்றும் யோகா மருத்துவப் பட்டப்படிப்புக்கான செலவை ஏற்று தனக்கு கல்லூரியில் இடம் அளித்த கல்லூரி தலைவர் டாக்டர். சௌந்தர ராஜன் அவர்களுக்கு தங்கள் குடும்பத்தின் சார்பாக நன்றி தெரிவிப்பதாகவும், மேலும் தான் நன்றாகப் படித்து ஏழை கிராமப்புற மக்களுக்கு சேவை ஆற்றுவேன் என்றும் மாணவி பூவிழி தெரிவித்தார்.
இதையும் படிங்க: கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர 2,99,558 பேர் விண்ணப்பம்!