கால்கள் தரையில் படாமல் ஊர்வலம்; நத்தம் அருகே விநோத வழிபாடு..! - மகா சிவராத்திரி
🎬 Watch Now: Feature Video
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே செல்லம்புதூர் ஸ்ரீ பட்டத்தரசி அம்மன் மகா சிவராத்திரி விழா வருடம் தோறும் கொண்டாடுவது வழக்கம்.
இந்த ஆண்டு பட்டத்தரசி அம்மன் கோயிலுக்கு பாத்தியப்பட்ட 24 மனை தெலுங்கு செட்டியார்கள், கொரகையர் குல பங்காளிகள் இணைந்து வடுகபட்டி, சிலமலை கோயில், நத்தம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து புனித தீர்த்தம் எடுத்து சந்தனகருப்பு கோயிலில் வைத்து பூஜை செய்தனர்.
பின்னர் ஊர்வலமாக பட்டத்தரசி அம்மன் கோயில் சென்றனர். அங்கு உள்ள கோயிலில் பூஜை செய்வதற்காக நேர்த்திக்கடன் வைத்தவர்கள் பன்றி குட்டிகளை அழைத்து வந்து அதன் கால்கள் தரையில் படாதவாறு பாதைகளில் சேலைகளை விரித்து, அதன் மீது பன்றிகளை நடக்க வைத்து ஊர்வலமாக அழைத்துச் சென்று கோயிலில் விருக பூஜை செய்து தங்கள் நேர்த்திக்கடனை நிவர்த்தி செய்தனர்.