பெண் ஆசிரியை கோரிய அரசு பள்ளி மாணவிகள்.. உடனடி நடவடிக்கை எடுத்த தருமபுரி எம்.பி! - உடனடி நடவடிக்கை எடுத்த எம் பி
🎬 Watch Now: Feature Video
தருமபுரி: தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளியை அடுத்த டொக்குபோதனஅள்ளி ஊராட்சி பூவல்மடுவு பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் டி.என்.வி எஸ்.செந்தில்குமார் ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வில் ஈடுபட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில் குமார் பள்ளி மாணவர்களைச் சந்தித்து கோரிக்கைகளைக் கேட்டறிந்தார். அப்போது பள்ளி மாணவிகள் பள்ளியில் ஆண் ஆசிரியர்கள் மட்டும் உள்ளதால் பல்வேறு சமயங்களில் அவர்களின் குறைகளை முன்வைக்க முடிவதில்லை என்றும், அதனால் அவர்களுக்குப் பாடம் நடத்தப் பெண் ஆசிரியைகள் வேண்டும் என்ற கோரிக்கையை நாடாளுமன்ற உறுப்பினரிடம் முன்வைத்தனர்.
இதனை அடுத்து தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் பள்ளிக் கல்வித்துறைக்குத் தொடர்பு கொண்டு மாணவிகளின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் உடனடியாக பள்ளிக்குப் பெண் ஆசிரியர்களை நியமனம் செய்ய அறிவுறுத்தினார். மேலும், அந்த பள்ளியில் பயிலும் மாணவர்கள், பள்ளிக்கு வர போதிய பேருந்து வசதி இல்லாததனால் தினமும் பள்ளிக்கு வரச் சிரமப் படுவதாகத் தெரிவித்தனர்.
அதனால் பள்ளி வருவதற்குப் பேருந்து வசதி ஏற்படுத்தி உதவுமாறும் எம்.பி.யிடம் கோரிக்கை விடுத்தனர். அந்த கோரிக்கையையும் ஏற்ற எம்.பி.செந்தில் குமார், மாணவர்களுக்கான பேருந்து வசதியினை விரைந்து செயல்படுத்தி முடிக்குமாறு அதிகாரிகளிடம் வலியுறுத்தினார். நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் டி.என்.வி.எஸ்.செந்தில்குமாரின் இந்த செயல் மாணவர்களிடையேயும் பொதுமக்களிடையேயும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: viral video: கைக் கடிகாரங்களை பட்டப்பகலில் திருடிச்சென்ற இரண்டு இளைஞர்கள்!