ஒரு டன் குல்பி ஐஸ்கிரீம்கள் அழிப்பு! நகராட்சி அதிகாரிகள் அதிரடி.. - மயிலாடுதுறை செய்திகள்
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/640-480-18527708-thumbnail-16x9-vlr.jpg)
மயிலாடுதுறை: உத்திரபிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த ரிஜிவான் அலி மற்றும் பதுருல் ஹசன் ஆகியோர் மயிலாடுதுறை நகராட்சிக்கு உட்பட்ட 29 வது வார்டு பனந்தோப்பு தெருவில் கடந்த இரண்டு வருடத்திற்கு மேலாக வசித்து வருகின்றனர். இந்நிலையில், அவர்கள் வீட்டிலேயே குல்பி ஐஸ்கிரீம் தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் நகராட்சி சுகாதார அலுவலர் லட்சுமிநாராயணன் தலைமையில் நகராட்சி துறை அதிகாரிகள் திடீரென ஐஸ்கிரீம் தயாரித்த இடத்தில் இன்று (மே 17) ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, குல்பி ஐஸ்கிரீம் தயாரிக்க உரிய அனுமதி பெறாமல் சுகாதாரமற்ற முறையில் குல்பி ஐஸ்கிரீம் தயாரித்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
இதனையடுத்து உடனடியாக, அங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த ஒரு டன் குல்பி ஐஸ்கிரீம் மற்றும் ஐஸ் கட்டிகள் குல்பி ஐஸ்கிரீம் தயாரிக்க பயன்படும் பொருட்களை நகராட்சி துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும், உரிய அனுமதி பெறாமல் மேற்கொண்டு குல்பி ஐஸ்கிரீம் தயாரித்து விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும், பறிமுதல் செய்யப்பட்ட ஒரு டன் குல்பி ஐஸ்கிரீம் உள்ளிட்டப் பொருட்களை நகராட்சி குப்பை கிடங்கிற்கு எடுத்துச் சென்று அழித்தனர்.