என்னது!... ஆவின் குல்ஃபியில ஈ-யா...! அதிர்சியடைந்த வாடிக்கையாளர்கள்!
🎬 Watch Now: Feature Video
விழுப்புரம்: ஒருங்கிணைந்த ஆவின் பால் உற்பத்தி நிலையம் விழுப்புரம் டெப்போ அடுத்த திருச்சி சாலையில் உள்ளது. இங்கு ஆவின் பொருட்களின் பால், நெய், குல்ஃபி, ஐஸ்கிரீம், பால்கோவா உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு அண்டை மாவட்டங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. மேலும் ஆவின் விற்பனை நிலையங்கள் மூலமும் ஆவின் நிறுவனத்தின் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது.
ஆவின் தயாரிப்பு தரமானது என்ற நம்பிக்கையுடன் பால், நெய் உள்ளிட்ட பொருட்களை தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வாங்கி செல்கின்றனர். இந்நிலையில் அங்கு தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்ட குல்பியில் ஈ உள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர், ஆவின் விற்பனை நிலைய விற்பனையாளரிடம் இது தொடர்பாக கேட்ட பொழுது, நேற்று தான் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளது.
அதனால் இனிவரும் காலங்களில் இது போன்று நிகழாமல் சரி செய்யப்படும் என்று ஒரு மேம்போக்கான பதில் அளித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆவின் வாடிக்கையாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதுமட்டுமின்றி கடந்த 6 மாதத்திற்கு முன் 25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட குல்பி தற்பொழுது 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இருப்பினும் ஆவினில் வாங்கிய குல்ஃபியில் ஈ இருந்தது பொது மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.