பழனி புலிப்பாணி ஆசிரமத்தில் சபரீசனின் தந்தை சாமி தரிசனம்! - பழனி ஆதினம்
🎬 Watch Now: Feature Video
திண்டுக்கல்: அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் நாள் தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா உள்ளிட்டப் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் வருகை தந்து பழனி முருகனைத் தரிசனம் செய்து வருகின்றனர். பழனி தண்டாயுதபாணி கோயிலின் நவபாஷாண சிலையை உருவாக்கியவர், போகர் சித்தர் ஆவார்.
அவரின் சீடரான ஸ்ரீ மத் போகர் பழனி ஆதீனம் புலிப்பாணி ஆசிரமம் பழனி முருகன் கோயில் மலை அடிவாரத்தில் உள்ளது. இங்கும் ஏராளமான பக்தர்கள் சென்று சாமி தரிசனம் செய்வது வழக்கம். அதே போல் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சம்பந்தியும், சபரீசனின் தந்தையுமான வேதமூர்த்தி, பழனி புலிப்பாணி ஆசிரமத்திற்கு வருகை தந்தார். பின் அவர் சாமி தரிசனம் செய்து விட்டு சிவானந்த புலிப்பாணி பாத்திர சுவாமிகளிடம் ஆசி பெற்றார். அதன் பின்னர் சபரீசனின் தந்தையார் வேதமூர்த்திக்கு பிரசாதங்களும் வழங்கப்பட்டு, மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.