கடலூர் பட்டாசு தொழிற்சாலையில் வெடி விபத்து - உரிமையாளர் கைது - FACTORY BLAST
🎬 Watch Now: Feature Video
கடலூர்: எம்.புதூர் கிராமத்தில் மோகன் ராஜ் என்பவர் நாட்டு வெடி பட்டாசு தயாரிக்கும் கொட்டகை வைத்துள்ளார். இந்நிலையில் எதிர்பாராத விதமாக அங்கு ஏற்பட்ட தீ விபத்தில் அங்கு தயாரித்து வைக்கப்பட்டிருந்த நாட்டு வெடி பட்டாசுகள் வெடித்து சிதறி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் இங்கு பணியில் இருந்த ஐந்து பேர் சிக்கியுள்ளனர். இந்த வெடிவிபத்தில் நெல்லிக்குப்பத்தைச் சேர்ந்த அம்பிகா(50) மற்றும் பெரிய காரைக்காடு கிராமத்தைச் சேர்ந்த சித்ரா(35) என்ற இரண்டு பெண்களும் சி.என். பாளையத்தை சேர்ந்த சத்யராஜ் (34) என்ற இளைஞரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் வசந்தா என்ற பெண்ணும் வைத்திலிங்கம் என்பவரும் படுகாயங்களுடன் கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனிடையே சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த கடலூர் முதுநகர் காவல் துறையினர் நாட்டு வெடி தயாரிப்பு உரிமையாளர் மோகன்ராஜை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Last Updated : Feb 3, 2023, 8:24 PM IST