Onam festival 2023: பெரம்பலூர் தனியார் கல்லூரியில் ஓணம் கொண்டாட்டம்.. மாணவிகள் அசத்தல் நடனம்! - ஓணம் பண்டிகை வரலாறு
🎬 Watch Now: Feature Video
Published : Aug 25, 2023, 8:48 PM IST
பெரம்பலூர்: கேரள மாநில மக்களின் முக்கிய பண்டிகைகளுல் ஒன்று ஒணம் பண்டிகையாகும். மகாபலி சக்ரவர்த்தியை இன்முகத்துடன் வரவேற்கும் நாள் ஓணம் பண்டிகை. அத்தப் பூ கோலமிட்டு சீரும் சிறப்பு மிகு கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழகத்தில் வேந்தர் சீனிவாசன் தலைமையில் ஓணம் பண்டிகை விழா நடைபெற்றது.
யானைகள் வரவேற்போடு கதகளி நடனம் ஆட, மகாபலி சக்ரவர்த்தி வேடமிட்டு பிரம்மாண்ட அத்தப் பூ கோலமிட்டு ஓணம் பண்டிகை நடைபெற்றது. கேரள மாநிலத்தை மாணவ - மாணவிகள் பாரம்பரிய உடை அணிந்து வந்தனர். தொடர்ந்து மாணவ - மாணவிகளின் கலை நிகழ்வுகள் நடைபெற்றது.
மகிழ்ச்சி, செழிப்பு, நல்லிணக்கம் ஏற்படுத்தும் நோக்கில் ஓணம் பண்டிகை விழா கொண்டாடப்படுவதாக மாணவர்கள் தெரித்தனர்.
இந்நிகழ்வில் கல்லூரி நிர்வாகிகள், புல முதல்வர்கள், பேராசிரியர்கள் உள்பட சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: Wayanad jeep Accident: பள்ளத்தில் ஜீப் கவிழ்ந்து 9 பேர் பலி; வயநாட்டில் நிகழ்ந்த சோகம்!