மெக்சிகோ பெண்ணை காதலித்து திருமணம் செய்த கோயம்புத்தூர் மாப்பிள்ளை!
🎬 Watch Now: Feature Video
கோயம்புத்தூர்: பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை குப்பிச்சிபுதூரைச் சேர்ந்தவர் தண்டபாணி - கிருஷ்ணவேணி தம்பதி. இவர்களுக்கு செளத்ரி ராஜ் என்ற மகனும், சௌந்தர்யா என்ற மகளும் உள்ளனர். தண்டபாணி டீக்கடை நடந்தி இருவரையும் படிக்க வைத்தார். இதில், செளத்ரி ராஜ் (டிப்ளமோ) கோவையில் படித்து முடித்தார். பின், கடந்த ஏழு வருடங்களுக்கு முன்பு, குடும்பத்தின் வறுமை சூழல் அறிந்து செளத்ரி ராஜ் மெக்சிகோவிற்கு சென்று, பெயின் ரோபோட் எக்ஸ்பெர்ட் பணியில் சேர்ந்துள்ளார். மிகவும் பொறுப்பான இளைஞரான இவர், தனது தங்கையின் திருமணத்திற்காக மாதம் தவறாமல் பணம் அனுப்பி வந்துள்ளார்.
அப்போது தான் பணிபுரியும் நிறுவனத்தில் மெக்சிகோவைச் சேர்ந்த டனியலா பணியில் சேர்ந்துள்ளார். டனியலா, செளத்ரி ராஜ் இருவரும் ஆரம்பத்தில் நண்பர்களாக பழகி, பின் இருவரும் காதலித்து வந்துள்ளனர். டனியலாவின் தந்தை எட்கர்சன் சேஸ் தனியார் கல்லூரில் பணிபுரிகிறார், தாய் மரியா எலேனா ஆவார்.
இருவீட்டார் சம்மதத்துடன் தமிழ் கலாசாரப்படி திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டு, இரு வீட்டார் மற்றும் உறவினர்கள் மத்தியில் ஆனைமலை தனியார் கல்யாண மண்டபத்தில் சௌத்ரிராஜ், டனியலா திருமணம் நடைபெற்றது. குடும்ப ஒற்றுமையும் தமிழ் கலாசாரத்தையும் விளக்கும் விதமாக சமஸ்கிருதத்தில் வேதங்கள் ஓத, இறைவன் சுப்ரமணியனுக்கு உகந்த நாளான பங்குனி உத்திரத்தில், திருப்புகழ் பாடல்கள் பாடி, டனியலா கழுத்தில் சௌத்ரிராஜ் தாலி கட்டினார். பின் தமிழ் கலாசாரப்படி அம்மி மிதித்து பெரியவர்கள் காலில் இருவரும் விழுந்து ஆசி பெற்றனர். கிராமத்து இளைஞர், வெளிநாட்டுப் பெண்ணை திருமணம் செய்தது அப்பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது.
இதையும் படிங்க: சாத்தப்பட்ட நடை - நயன்தாராவுக்காக திறக்கப்பட்ட தாராசுரம் ஆலய பிரதானக்கதவு