டிபிஐ வளாகத்தில் 8.5 அடி உயரத்தில் பேராசிரியர் க.அன்பழகன் சிலை திறப்பு! - tamil news
🎬 Watch Now: Feature Video
சென்னை: நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் அலுவலகத்திற்கு பேராசிரியர் க.அன்பழகன் கல்வி வளாகம் என ஏற்கனவே பெயர் வைக்கப்பட்டு அதற்குரிய பெயர் பலகையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
திமுகவின் முன்னாள் பொதுச் செயலாளராகவும், 9 முறை சட்டமன்ற உறுப்பினராகவும், சுகாதாரத்துறை, கல்வித்துறை, நிதித்துறை அமைச்சராக இருந்தவர் பேராசிரியர் க.அன்பழகன். அவரது நூற்றாண்டு விழாவை போற்றும் வகையில், பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் அலுவலக வளாகத்திற்கு பேராசிரியர் க.அன்பழகன் கல்வி வளாகம் என பெயரிடப்பட்டது.
அதேபோல் சென்னை நந்தனத்தில் உள்ள நிதித்துறை அலுவலக வளாகத்திற்கு பேராசிரியர் க.அன்பழகன் வளாகம் என பெயரிடப் பட்டன. இந்த நிலையில் பேராசிரியர் க.அன்பழகன் நூற்றாண்டு விழா கொண்டாடும் வகையில், பள்ளிக்கல்வித்துறை இயக்குந்ர் அலுவலக வளாகத்தில் 8.5 அடி உயரமுள்ள திருவுருவ வெண்கல சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, கே.என்.நேரு,பொன்முடி, சேகர் பாபு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, உதயநிதி ஸ்டாலின், பேராசிரியர் க.அன்பழகனின் பேரன் வெற்றி அழகன் மற்றும் குடும்பத்தினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.