Viral Video - சென்னையில் நடுரோட்டில் தாக்கிக் கொண்ட காதலர்கள்! - காதலியை தாக்கிய காதலன்
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/20-07-2023/640-480-19048913-thumbnail-16x9-cls.jpg)
சென்னை: இலங்கையை பூர்வீகமாக கொண்ட 24 வயது நிரம்பிய இளம்பெண் ஒருவர், கடந்த 1991ஆம் ஆண்டு முதல் பாப்பிரெட்டிபாளையம் முள்ளிகாடு பகுதியில் உள்ள அகதிகள் முகாமில் வசித்து வருகிறார். இவரது உறவினரான அலெக்சாண்டர் என்பவர் நடத்தும் ஹோம் கேரில் இளம்பெண் பணியாற்றி வருகிறார். இளம்பெண் இவரது உறவினரும் இலங்கை அகதியுமான சஞ்சய் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று (ஜூலை 19) இளம்பெண் புஷ்பாவதி அம்மாள் தெருவில், அவரது நண்பர்களுடன் தங்கியிருந்தபோது, அந்த வீட்டிற்கு குடிபோதையில் சென்ற காதலன் சஞ்சய், வெளியில் செல்லலாம் என இளம்பெண்ணை அழைத்துச்சென்றுள்ளார். பின்னர் மேற்கு மாம்பலம் மேட்லி சப்வே அருகே சென்றபோது திடீரென காதலர்கள் இருவருக்குள்ளும் தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது சஞ்சய் காதலியை நடுரோட்டிலே தாக்கிய போது காதலி கதறி அழுதுள்ளார். இதனைக் கண்ட பொதுமக்கள் உடனடியாக இருவரையும் தடுக்க முயன்றுள்ளனர். ஆனால், இதனை மீறியும் காதலன் சஞ்சய், கீழே கிடந்த கல்லால் காதலியை தாக்க முயன்றார்.
உடனடியாக பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் குமரன் நகர் காவல் துறையினர், சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர். பின்னர் காலையில் காவல் நிலையத்தில் ஆஜராகுமாறு தெரிவித்துள்ளனர். ஆனால், இருவரும் காதலர்கள் என்பதால் புகார் ஏதும் வேண்டாம் என காவல் துறையினரிடம் கேட்டுக்கொண்டனர். காதலர்களுக்குள் ஏற்பட்ட மோதல் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: வேலூர் மாவட்டத்தில் தொடரும் பாம்புக்கடி சம்பவங்கள் - அச்சத்தில் மலைவாழ் மக்கள்!