சென்னை மெட்ரோ சேவை தற்காலிகமாக நிறுத்தம்.. இதுதான் காரணமா..?
🎬 Watch Now: Feature Video
சென்னையில் உள்ள மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருப்பது மெட்ரோ ரயில் சேவையாகும். நாள்தோறும் காலையில் பணிக்கு செல்லும் ஊழிர்கள் போக்குவரத்து நெரிசலை தவிர்த்து, சரியான நேரத்திற்கு அலுவலகம் சென்று வர மெட்ரோ ரயில் சேவை மிகவும் ஏதுவாக இருக்கிறது. இந்த சேவையை விரிவுபடுத்துவதற்காக சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகள் பல்வேறு இடங்களில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், இன்று (மார்ச் 3) காலையில் வழக்கம் போல், பயணிகள் மெட்ரோ ரயில் நிலையம் வரும்போது, வட சென்னை திருவெற்றியூர், விம்கோ மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து சென்னை விமான மெட்ரோ ரயில் நிலையம் செல்லக்கூடிய வழித்தடத்தில் சிக்னல் பிரச்சனை ஏற்பட்டது. இதனால் சரியான நேரத்திற்கு அலுவலகத்திற்கு செல்லும் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.
சிக்னல் பிரச்சனை காரணமாக அரை மணி நேரம் மெட்ரோ ரயில் சேவை பாதிக்கபட்டது. சென்னை டிஎம்எஸ் சுரங்கத்திற்குள் ரயில் சிக்கியதால் சிக்னல் பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து விளக்கம் அளித்த மெட்ரோ ரெயில் நிர்வாகம், 'சென்னை சென்ட்ரல் இருந்து விமானநிலையம் மெட்ரோ ரயில் சேவை நிறுத்தப்பட்டு உள்ளது.
மெட்ரோ ரயிலில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சனை காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளது. அரசினர் தோட்டம் வழியே ஆலந்தூர் செல்லும் நீல வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு காரணமாக நிறுத்தம். தற்போது சென்ட்ரல் - கோயம்பேடு - விமான நிலையம் செல்லும் ரயில் ஆலந்தூர் மெட்ரோ நிலையம் வரை இயங்கும்' எனத் தெரிவித்துள்ளது.