குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் தீ விபத்து! - current updates
🎬 Watch Now: Feature Video
சென்னை: குரோம்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனையின் புறநோயளிகள் பிரிவு, உள்நோயாளிகள் பிரிவு, அறுவை சிகிச்சை, ஸ்கேன் பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் உள்ளன. இங்கு, தாம்பரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளான குரோம்பேட்டை, பல்லாவரம், சிட்லபாக்கம், சேலையூர், முடிச்சூர், மண்ணிவாக்கம், திருநீர்மலை, பெருங்களத்தூர், வண்டலூர், போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான நோயாளிகள் இங்குச் சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
இந்நிலையில், திங்கட்கிழமை வழக்கம் போல பொதுமக்கள் மருத்துவமனைக்கு வந்து கொண்டிருந்தபோது, மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவு கட்டிடத்தின் நுழைவாயில் அருகே சுவர் ஓரம், தரையில் சென்று கொண்டிருந்த மின்சார கேபிளில் இருந்து திடீரென தீப்பொறி ஏற்பட்டு சத்தமாக வெடிக்க தொடங்கியது.
இதனைக் கண்டு, அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் அங்கிருந்து ஓடத் துவங்கினர். பின்னர், மருத்துவமனை நிர்வாகிகள் மின்சாரத்தை துண்டித்து விட்டு, மின்சார கேபிளில் ஏற்பட்ட சேதத்தை சரி செய்யும் பணிகளில் ஈடுபட்டனர். இதனால் குரோம்பேட்டை அரசு மருத்துவமனை வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும், மருத்துவமனை ஊழியர்கள் துரிதமாக செயல்பட்டு உடனடியாக மின்சாரத்தை அனைத்து தீயை கட்டுப்படுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
இதையும் படிங்க: பள்ளிவாசலுக்குள் புகுந்து நோன்பு கஞ்சியை ருசி பார்த்த யானைகள்!