மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாக போராட்டம்; போராட்டக்காரர்களை முடக்க போலீஸ் அதிகாரிகள் கிள்ளியதாக குற்றச்சாட்டு - wrestlers protest latest news

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jun 2, 2023, 10:43 PM IST

மயிலாடுதுறை: பாலியல் குற்றசாட்டுக்கு உள்ளான இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும் பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங்கை கைது செய்ய வலியுறுத்தி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் மற்றும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் மயிலாடுதுறை தலைமை தபால் நியைத்தை இன்று (ஜூன் 2) முற்றுகையில் ஈடுபட்டனர். அப்போது போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து போராட்டத்தின் போது போலீசார் போராட்டகாரர்களை அப்புறப்படுத்துவதற்காக போராட்டகாரர்களை கூட்ட நெரிசலின் போது யாரோ சிலர் கிள்ளியதாக போராட்டகாரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் மாவட்ட தலைவர்கள் ஐய்யப்பன், மணிபாரதி, வெண்ணிலா தலைமையில் பேரணியாக வந்த போராட்டக் குழுவினரை தடுப்புகளைக் கொண்டு தபால் நிலையம் வாயிலில் உள்ளே செல்லாதவாறு போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது பாஜக எம்பி பிரிஜ் பூஷன் சரண் சிங்கை கைது செய்ய வலியுறுத்தி முழக்கமிட்ட போராட்டக்காரர்கள் போலீசாரின் தடுப்புகளை மீறி தபால்நிலையம் உள்ளே செல்ல முயன்றனர். 

அப்போது போராட்டக்காரர்கள் போலீசார் வைத்திருந்த பேரிகார்டுகளை பிடித்து இழுத்ததால் போலீசார் மற்றும் போராட்டக்காரர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதில் பேரிகாட்டை விடாமல் பிடித்து இழுத்த ஒருவரை போலீசார் அப்புறப்படுத்தும்போது தன்னை போலீசார் கூட்ட நெரிசலில் கிள்ளி தள்ளினார் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த வாக்குமூலம் போலீசாரின் அத்துமீறலால் கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து பொது மக்களிடையே பதற்ற சூழலை தவிர்க்கும் நோக்கத்தில் போலீசார் அனைவரையும் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

பாலியல் குற்றசாட்டுக்கு உள்ளான இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும் பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங்கை கைது செய்ய வலியுறுத்தி போராட்டம் நடத்தி வரும் மல்யுத்த வீரர் வீராங்கனைகளுக்கு ஆதரவாக நாடெங்கும் ஆங்காங்கே இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்காவிடில் நாடு தழுவிய போராட்டத்த்தில் ஈடுபட போவதாக டெல்லி பாரதிய கிஷான் சங்கத்தின் தலைவர் ராகேஷ் டிகாயிட், மல்யுத்த வீரர்களின் குறைகளை அரசு நிவர்த்தி செய்ய வேண்டும் என விவசாய சங்கங்கள், மல்யுத்த வீரர்களுடன் ஜூன் 9ஆம் தேதி டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரி நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: wrestlers protest: பாஜக எம்.பி.யை கைது செய்யக்கோரி சென்னையில் மாணவர்கள் அமைப்பு போராட்டம்!

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.