"பசுமை நிறைந்த நினைவுகளே"... பணி மாறுதல் விழாவில் பெண் அதிகாரியின் நெகிழ்ச்சி தருணம்! - பாடித்திரிந்த பறவைகளே
🎬 Watch Now: Feature Video
கோயம்புத்தூர்: கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக இருந்தவர் சுமதி. இவர் கடந்த ஏப்ரல் மாதம் பணி மாறுதல் பெற்று கோவைக்கு வந்துள்ளார். கடந்த 4 மாதங்களாக பணிபுரிந்து வந்த அவர், பள்ளிகளில் கூட்டங்கள், நேரடி ஆய்வு என விறுவிறுப்பாக செயல்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் கடந்த வாரம் இவருக்கு திடீரென ராணிப்பேட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பணியிட மாறுதல் கிடைத்தது.
கோவைக்கு வந்து சில மாதங்களிலே பணியிட மாற்றம் செய்யப்பட்ட முதன்மை கல்வி அலுவலர் சுமதி, தனது சக ஊழியர்களின் முன்பு 'ரத்த திலகம்' திரைப்படத்தில் வரும் "பசுமை நிறைந்த நினைவுகளே, பாடித்திரிந்த பறவைகளே, பழகிக் கழித்த தோழர்களே பறந்து செல்கின்றோம்" என்ற பாடலை பாடி உருக்கமாக விடைபெற்றுச் சென்றார்.
தற்போது சக ஊழியர்கள் முன்பு அவர் பாடிய பாடல் குறித்த வீடியோ சமூக வளைத்தலங்களில் வைரலாகி வருகிறது. பள்ளி மாணவர்களுக்கு பிரபல நாளிதழை இலவசமாக வழங்க முதன்மை கல்வி அலுவலர் சுமதி சிறப்பு அனுமதி வழங்கியதாக கூறப்படும் நிலையில் அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதுடன், அரசியல் ரீதியாக சர்ச்சைகளும் எழுந்ததாக சொல்லப்படுகிறது. தற்போது அதன் காரணமாக அவர் அவசர அவசரமாக பணியிட மாற்றம் செய்யப்பட்டார் எனக் கூறப்படுகிறது.