முல்லைப் பெரியாறு அணையின் தரம் குறித்து தேசிய அறிவியல் மைய விஞ்ஞானிகள் குழு ஆய்வு! - theni news
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/09-11-2023/640-480-19980237-thumbnail-16x9-tni.jpg)
![ETV Bharat Tamil Nadu Team](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/authors/tamilnadu-1716535724.jpeg)
Published : Nov 9, 2023, 7:11 AM IST
தேனி: தமிழக - கேரள எல்லையில் குமுளி அருகே உள்ளது முல்லைப் பெரியாறு அணை. 152 அடி உயரம் கொண்ட இந்த அணையில் தேங்கும் நீரினை மதுரை, தேனி, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம் உள்ளிட்ட ஐந்து மாவட்ட மக்கள் குடிநீர் மற்றும் விவசாயத்திற்குப் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த சில தினங்களாக அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக அணைக்கு நீர் வரத்து ஆயிரத்து 800 கன அடிக்கும் அதிகமாக உள்ளது. அணையின் நீர்மட்டம் 127.55 அடியாக உயர்ந்துள்ளது. இந்நிலையில் நேற்று(நவ.8) பெங்களூருவிலிருந்து வந்த தேசிய அறிவியல் மையத்தின் ஆராய்ச்சியாளர் ஸ்ரீ பந்த் நாயக் மற்றும் பிரவீனா தாஸ் ஜெனிபர் தலைமையிலான குழுவினர் ஆய்வு நடத்தினர்.
மத்திய அரசின் ஆலோசனைப்படி அணையின் தரம் குறித்து ஆய்வுப் பணிகளை மேற்கொண்ட இந்த குழு அணையின் தலை மதகுப் பகுதி, உபரி நீர் வெளியேற்றும் பகுதி மற்றும் நீர் கசிவுப் பகுதிகளை ஆய்வு செய்து அணையின் தரம் குறித்த அறிக்கைகளைச் சமர்ப்பிக்க உள்ளனர்.
இந்த ஆய்வில் தமிழக நீர்வளத்துறைச் செயற்பொறியாளர் சாமுருவின், உதவி செயற்பொறியாளர் குமார் மற்றும் உதவிப் பொறியாளர் ராஜகோபால் உள்ளிட்டோர் அணையின் தரம் மற்றும் செயல்பாடு குறித்து மத்திய குழுவினருக்கு எடுத்துரைத்தனர்.