மாயூரநாதர் கோயிலில் மத்திய அமைச்சர் சர்பானந்தா சாமி தரிசனம்! பிரதமர் மோடி பெயரில் சிறப்பு அர்ச்சனை! - sarbananda sonowal
🎬 Watch Now: Feature Video
Published : Dec 9, 2023, 5:29 PM IST
மயிலாடுதுறையில் உள்ள புகழ்பெற்ற மாயூரநாதர் கோயிலில் மத்திய அமைச்சர் சர்பானந்தா சோனாவால் சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து பிரதமர் மோடிக்கு சிறப்பு அர்ச்சனை செய்து சாமி மற்றும் அம்பாளை வழிபட்டார்.
மயிலாடுதுறையில் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான மாயூரநாதர் கோயில் அமைந்து உள்ளது. தேவார பாடல் பெற்ற இத்தலத்தில் சிவபெருமானின் சாபம் பெற்ற பார்வதி தேவியார் மயில் உருகு கொண்டு சிவனை பூஜித்து, சாப விமோசனம் பெற்ற ஸ்தலமாக விளங்கி வருகிறது. இத்தகைய சிறப்புமிக்க இக்கோயிலில் சுவாமி அம்பாளை வழிபட்டால் பாவ விமோசனம் கிட்டும் என்பது ஐதீகம்.
இந்நிலையில் மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகம் மற்றும் ஆயுஷ் அமைச்சகத்தின் அமைச்சரான சர்பானந்தா சோனாவால் இன்று (டிச. 9) இக்கோயிலுக்கு வருகை தந்தார். அப்போது அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பிலும் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஆர்டிஓ யுரேகா மற்றும் வட்டாட்சியர் ஆகியோர் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து கோயிலுக்குள் சென்ற மத்திய அமைச்சர் சாமி மற்றும் அம்பாள் உள்ளிட்ட சன்னதிகளில் சிறப்பு தரிசனம் செய்தார். பின்னர் பிரதமர் மோடி பெயரில் அர்ச்சனை செய்து வழிபாடு மேற்கொண்டார். தொடர்ந்து அவருடன் பாஜக மாநில பொறுப்பாளர் கருப்பு முருகானந்தம், மாவட்ட தலைவர் அகோரம் உள்ளிட்ட பாஜகவினர் பலர் உடன் இருந்தனர்.