CCTV: சென்னையில் துணிகரம்; ஓடும் ரயிலில் செயின் பறிப்பு; கொள்ளையன் தப்பி செல்லும் சிசிடிவி காட்சி..

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jun 23, 2023, 5:16 PM IST

சென்னை: திருமுல்லைவாயலை பகுதியைச் சேர்ந்தவர் வளர்மதி (43). இவர் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சைப் பிரிவில் உதவியாளராக பணியாற்றி வருகிறார். நேற்று (ஜூன் 22) மாலை 3.45 மணிக்கு பணிமுடித்து சென்னை சென்ட்ரலில் இருந்து திருவள்ளூர் நோக்கி செல்லும் மின்சார ரயில் மூலம் திருமுல்லைவாயலுக்கு சென்றுள்ளார்.

ரயிலானது பேசின்பிரிட்ஜ் ரயில் நிலையத்தில் நின்று பின்னர் கிளம்பும் போது திடீரென பின்பக்கத்தில் நின்றிருந்த இளைஞர் ஒருவர் வளர்மதி கழுத்தில் அணிந்திருந்த 10 சவரன் தாலி செயினை பறித்துக் கொண்டு, ஓடும் ரயிலில் இருந்து இறங்கி தப்பிச் சென்றுள்ளார். இது குறித்து வளர்மதி கொடுத்த புகாரின் அடிப்படையில் பேசின்பிரிட்ஜ் ரயில்வே காவல் துறையினர் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இளைஞர் சென்டரல் ரயில் நிலையத்திற்கு செல்லும் சிசிடிவி காட்சியும், பேசின்பிரிட்ஜ் அருகே செயினை பறித்துவிட்டு ரயிலில் இருந்து இறங்கி ஓடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. 

அதேபோல், ராமாபுரம் கங்கையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த தட்சாயிணி (47), வளசரவாக்கம் பகுதியில் ஐடி நிறுவன கேண்டீனில் டீ மாஸ்டராக பணியாற்றி வருகிறார்.  தட்சாயிணி இன்று (ஜூன் 23) காலை 8 மணியளவில் வழக்கம்போல பணிக்கு சென்ற போது பின் தொடர்ந்து வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் திடீரென தட்சாயிணி கையில் வைத்திருந்த செல்போனை பறித்துக் கொண்டு தப்பிச்சென்றார். 

அதிர்ச்சியடைந்த தட்சாயிணி கொள்ளையனை பின் தொடர்ந்து பிடிக்க முயன்ற போது தவறி விழுந்ததில் தட்சாயிணிக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக வளசரவாக்கம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து திருடனை தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: ஆன்லைனில் பெண்ணுக்கு ஆபாச மெசேஜ்; உத்தரபிரதேச இளைஞரை கைது செய்த ஹைதராபாத் போலீஸ்

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.