காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசை கண்டித்து பெரியார் திராவிட முன்னேற்ற கழகத்தினர் ஆப்பாட்டம்! - வாட்டாள் நாகராஜ்
🎬 Watch Now: Feature Video
Published : Oct 9, 2023, 7:13 PM IST
திருவள்ளூர்: காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவின் படி தமிழகத்திற்கு நீரைத் திறக்காமல் கர்நாடக அரசு மறுப்பு தெரிவித்து வருகிறது. கர்நாடக அரசின் இந்த முடிவு தமிழக விவசாயிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுக்கு எதிராகப் பெங்களூருவில் கன்னட அமைப்புகள் முழு அடைப்பு போராட்டத்தை நடத்தியது.
மேலும், தங்களிடம் போதுமான அளவு தண்ணீர் இல்லை எனக்கூறி காவிரி நீரைத் தர இயலாது எனக் கர்நாடக அரசு அறிவித்தது. காவிரி நடுவர் மன்ற உத்தரவையும் மதிக்காமல், தமிழ்நாட்டிற்குத் திறந்து விட வேண்டிய காவிரி நீரைத் திறந்து விடாமல் இருந்து வரும் கர்நாடகா அரசைக் கண்டிக்கும் விதமாகத் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே பெரியார் திராவிட முன்னேற்றக் கழக கட்சியினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இதில் கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்படுவதையும் தமிழ்நாடு முதலமைச்சரையும் கொடும்பாவி எரித்த கன்னட சலுவளி கட்சியின் தலைவர் வாட்டாள் நாகராஜைக் கண்டித்துக் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதையும் படிங்க: சந்திரபாபு நாயுடு கைதை கண்டித்து திருவள்ளூரில் கண்டன ஆர்ப்பாட்டம்!