Viral Video: டிவைடரில் மோதி பறந்த புல்லட் - Karnataka news
🎬 Watch Now: Feature Video
கர்நாடகா மாநிலம், விஜயநகரம் மாவட்டம், ஹாஸ்பெட்டின் சித்தாவாடிகி சாலையில் பல இளைஞர்கள் பைக் ரேஸில் ஈடுபட்டனர். இதில் விருபகாஷா மற்றும் மல்லிகார்ஜூனா ஆகிய இருவரும் புல்லட் பைக்கில் அதிவேகமாக வந்து கொண்டிருந்தனர். இதனை மற்றொருவர் வீடியோ எடுத்துக் கொண்டே வந்துள்ளார். இந்த நிலையில் அதிவேகமாக வந்ததால் கட்டுப்பாட்டை இழந்த புல்லட், டிவைடரில் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் பைக்கில் பயணித்த இருவரும் தூக்கி வீசப்பட்டனர். பின்னர் உடனடியாக இருவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனையடுத்து இதுகுறித்து தகவல் அறிந்த ஹாஸ்பெட் போக்குவரத்து காவல் துறையினர், புல்லட்டை பறிமுதல் செய்தனர். மேலும் அதிவேகமாக பைக் ஓட்டி வந்த இருவர் மீதும் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தற்போது இதுதொடர்பான வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.