Brahma Kamalam flower: வீட்டில் பூத்து குலுங்கிய பிரம்ம கமலம் பூ.. கண்டு ரசித்த பொது மக்கள்! - Brahma Kamal flower bloom at home in Vellore
🎬 Watch Now: Feature Video
Published : Sep 21, 2023, 7:35 AM IST
வேலூர்: ஆண்டுக்கு ஒரு முறை பூக்கும் பிரம்ம கமலம் பூவானது பேரணாம்பட்டு பகுதியில் ஒரு வீட்டில் பூத்தது. அவற்றை பொதுமக்கள் கற்பூரம் ஏற்றி பூஜைகள் செய்து, கண்டு ரசித்தனர்.
தென் அமெரிக்கா, மெக்சிகோ நாட்டை பிறப்பிடமாக கொண்ட பிரம்ம கமலம் பூவானது ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே பூக்கக்கூடிய தன்மைக் கொண்டதாகும். இமயமலைகளில் மட்டும் பூக்கக்கூடிய பிரம்ம கமலம் பூவானது, வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு பகுதியில் உள்ள மார்கபந்து என்பவரது வீட்டில் நேற்று (செப். 20) இரவு 8 மணிக்கு மலர துவங்கி ஒன்பது மணிக்கு இதழ்களை விரித்து அழகாக பூத்தது.
பிரம்ம கமலம் பூவானது இரவில் மட்டும் மலரும் தன்மையை கொண்டதாகும். இதில் மூன்று வகை பூக்கள் உண்டு. மேலும், பல்வேறு மருத்துவ குணங்களைக் கொண்ட பிரம்ம கமலம் பூ, படைக்கும் கடவுள் பிரம்மனுக்கு உகந்த பூவாக கருதப்படுவதால் ‘பிரம்ம கமலம்’ என்று அழைக்கப்படுகிறது. சிவனுக்கு உகந்த பூ என்பதால் இவற்றை சிவனுக்கு பூஜை செய்து வழிபடுகின்றனர்.
இந்நிலையில், பேரணாம்பட்டு பகுதியில் மார்கபந்து என்பவரது வீட்டில் பூத்திருக்கும் பிரம்ம கமலம் பூ குறித்து குடும்பத்தினர் கூறுகையில், "கடந்த ஓராண்டுக்கு முன்பு எங்கள் உறவினர் வீட்டிலிருந்து செடியை சிறிதாக உடைத்து வந்து வீட்டில் நட்டு வைத்தோம். அதனைத் தொடர்ந்து இன்று இரவு பிரம்ம கமலம் பூ பூத்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. எனவே அவற்றிற்கு பூஜைகள் செய்து வழிபாடு செய்தோம்" என்று கூறினர். மேலும், வீட்டில் பூத்த பிரம்ம கமலம் பூவை அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அதிசயமாக பார்த்து வணங்கிச் சென்றனர்.