காவல் துறை சோதனையின் போது சிக்கிய வெடிகுண்டு; தப்பி ஒடிய 17 வயது சிறுவன்! - மதுரவாயல்

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jul 8, 2023, 8:10 PM IST

சென்னை மதுரவாயலை அடுத்த வானகரம் சிக்னலில் கடந்த மே 19 ஆம் தேதி மதியம் பூந்தமல்லி போக்குவரத்து உதவி ஆய்வாளர் ரமணகாந்தி, வேணுகோபால், காவலர் லட்சுமணன், மூவேந்தன் ஆகியோர் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற நபரை மடக்கி விசாரணை செய்தனர். 

அப்போது, அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த காவல் துறையினர், அந்த நபரின் பையை சோதனையிட்டனர். அப்போது, அதில் இரண்டு நாட்டு வெடிகுண்டுகள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் இருந்தது தெரியவந்தது. இதற்கிடையே அந்த அடையாளம் தெரியாத நபர் இருசக்கர வாகனத்தை போட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார். 

இதனைத் தொடர்ந்து போக்குவரத்து காவல் துறையினர், மதுரவாயல் சட்டம் ஒழுங்கு காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் அங்கு சென்ற வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாயுடன் சென்ற காவல் துறையினர், பையை சோதனை செய்தனர். 

சோதனை நடத்திய பின் நாட்டு வெடிகுண்டு, கத்தி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர், மதுரவாயல் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதன் மூலம், தப்பி ஓடிய நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பியோடிய நபர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் திருட்டு வாகனம் என்பது தெரியவந்தது. 

இந்த நிலையில் நாட்டு வெடிகுண்டுகளையும், இருசக்கர வாகனத்தையும் போட்டுவிட்டு காவல் துறையினரிடம் இருந்து தப்பித்தது திருத்தணியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. சென்னை மாநகர அதிதீவிர குற்றத் தடுப்பு பிரிவு காவல் துறையினர் இன்று திருத்தணியில் கைது செய்தனர். பின்னர் சிறுவனை மதுரவாயல் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இதையும் படிங்க: West Bengal: பஞ்சாயத்து தேர்தலில் கலவரம்.. 15 பேர் படுகொலை! பாஜக - திரிணாமுல் இடையே கடும் போட்டி!

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.